எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. பல்வேறு சுற்றுலாத்தலங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்(வண்டி எண் : 06035,06036) மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி
எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் புறப்பட்டு வேளாங்கண்ணி வந்து சேரும் (வண்டி எண் 06035)
வேளாங்கண்ணி – எர்ணாகுளம்
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஜனவரி 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் புறப்பட்டு எர்ணாகுளம் சென்று சேரும்(வண்டி எண் 06036)
தெற்கு ரயில்வே, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவையை ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்துள்ள நிலையில், இதனை நிரந்தர ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் என்பதே தமிழகம் மற்றும் கேரள ரயில் பயணிகள் மற்றும் பயணிகள் நலச்சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.