Home » ஓய்வுபெறுகிறார் இறையன்பு.. புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்கிறார் ஷிவ்தாஸ் மீனா!

ஓய்வுபெறுகிறார் இறையன்பு.. புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்கிறார் ஷிவ்தாஸ் மீனா!

0 comment

தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் இந்த மாதம் அதாவது ஜூன் 30 இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து ஒன்றிய அரசிடம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதால் தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி பொறுப்போர். நாளையுடன் இறையன்பு ஐஏஸ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவதால் புதிய தலைமை செயலாளராகி உள்ளார் சிவ்தாஸ் மீனா.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா 5.10.1964 அன்று பிறந்தார். என்ஜினியரிங் பட்டம் பெற்றவரான சிவ்தாஸ் மீனாவிற்கு ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். ஜப்பான் மொழியையும் அவர் கற்றுள்ளார்.

1989ம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார். காஞ்சீபுரம் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா கோவில்பட்டி உதவிக் கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து பொறுப்புகளை வகித்தார்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்துள்ளார்.

தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனாவை, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்பினார். இதன்படியே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter