Home » கடற்கரைத்தெரு வரிப்பணங்களை விரும்பும் பேரூராட்சி, அவர்களின் அடிப்படை தேவைகளை மறுப்பது ஏன்???

கடற்கரைத்தெரு வரிப்பணங்களை விரும்பும் பேரூராட்சி, அவர்களின் அடிப்படை தேவைகளை மறுப்பது ஏன்???

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- கொடுக்கப்பட்ட வாக்குறுதியை காப்பாற்ற மறுக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் என்று கடற்கரைத்தெரு இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சிகுட்பட்ட கடற்கரைத்தெரு 8 மற்றும் 9 வது வார்டு உள்ள பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கால்வாய்,சாக்கடைகள் குடிநீரில் கலப்பது போன்ற கோரிக்கைகளை பலமுறை பேரூராட்சி நிர்வாகிகளிடம் மனு கொடுத்தனர்.எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாததை கண்டித்து டிசம்பர் 7ம் தேதி கடற்கரைத்தெரு ஜமாத்தார்கள் மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் மன்றத்தினர் பேரூராட்சி வளாகத்தில் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தை நம்முடைய அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் சமாதனம் ஏற்பட்டு பேரூராட்சி நிர்வாகம் டிசம்பர் 18ம் தேதிக்குள் உடனடியாக சரிசெய்யப்படும் என்று வாக்குறுதியை அதிகாரிகள் அளித்ததின் பேரில் அப்போது கலைந்து சென்றனர்.

இந்நிலையில் குறிப்பட்ட நாளையும் தாண்டியும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.இதன் காரணமாக அப்பகுதி மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.அவர்களுடைய வரிப்பணங்களை மட்டும் குறிவைக்கின்ற பேரூராட்சி அவர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறது.உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter