Thursday, September 12, 2024

அதிரை பிரஸ் ப்ரொடெக்சன் கவுன்சிலின் ஆலோசனை! இரண்டு முக்கிய தீர்மானங்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் இயங்கி வரும் உள்ளூர் இணைய ஊடகங்களையும், அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்டது ADIRAI PRESS PROTECTION COUNCIL.

இதன் முதல் நேரடி மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று அதிரை அரேபியன் பேலஸில் நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த முன்னணி இணைய ஊடகங்களான அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை பிறை, டைம்ஸ் ஆப் அதிரை, அதிரை இதழ் ஆகியவற்றின் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன.

– சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெறும்.

– நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு சங்க அலுவலகம், அமைப்பை பதிவு செய்தல், அமைப்பு சந்தா போன்றவை குறித்து முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

– செய்திகளை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மிரட்டல், அச்சுறுதல், தாக்குதல், வழக்குகளுக்கு உள்ளானாலோ ஊடக வேற்றுமைகளை கடந்து அவர்களுக்கு உறுதுணையாக சங்கம் நிற்கும் என முடிவெடுக்கப்பட்டது.

– போலி பத்திரிக்கையாளர்களை ஒழிப்பது பற்றியும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்படி பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டு செய்திகளை வெளியிட பணம், லஞ்சம் கேட்டாலோ, வேறு விசயத்துக்காக மிரட்டினாலோ, கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது புகாரளிக்க தனி தொடர்பு எண்ணை சங்கம் சார்பில் அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது.

– வாராந்திர செய்தி கலந்துரையாடல் கூட்டத்தை வீடியோ கான்பர மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடத்தவும், மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தை அந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

– பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பும் உரிமையும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு சுயமரியாதையும் முக்கியம். அதை உறுதிபடுத்த 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. அவசர செய்திகள், மரண அறிவிப்பு, மக்கள் நலன், பேரிடர் கால செய்திகளை தவிர்த்து, முறையான அழைப்புகள் இல்லாத அரசு, கட்சி, அமைப்பு, முஹல்லா, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அணிகளின் நிகழ்வுகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

2. நிகழ்ச்சியின் வரவேற்புரை மற்றும் நன்றியுரைகளில் செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களை யாரும் குறிப்பிடுவதில்லை. அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

– அனைத்து ஊடகங்களுக்கும் பொருளாதார அடிப்படையில் வலுவாக இருந்தால் மட்டுமே நெடுங்காலத்துக்கு செயல்பட முடியும். எனவே ஊடகங்களில் வெளியிடப்படும் நிறுவன விளம்பரங்கள், தொடக்க விழா போன்ற செய்திகள், கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா, விளையாட்டு அறிவிப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் நிகழ்வுகள் சார்ந்த அறிவிப்புகளை விளம்பரமாகவே கருத வேண்டும் என்றும், அதற்காக ஒரு பதிவுக்கும், வீடியோ, இணையத்தில் ஒரு இடத்தில் வைக்கப்படும் விளம்பரத்துக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

– விளம்பரங்களுக்கு பெறப்படும் குறைந்தபட்ச தொகையை அதிகரித்து அனைத்து ஊடகங்களும் ஒரு தொகையை நிர்ணயிக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

– சங்கத்துக்கு கட்டணம் பெற்றுக்கொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்த ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

– காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அதிரை பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் தொடர்பான அறிமுகத்தை கொடுத்து, இனி காவல் நிலைய செய்திகள் தவறாமல் அதிரையின் உள்ளூர் ஊடகங்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

– சங்கத்தின் முடிவுகள், நடவடிக்கைகள் ஊடகங்கள், பத்திரிகையாளர்களின் உரிமை, பாதுகாப்பை உறுதி செய்யவே அன்றி எந்த வகையில் எந்த தனிப்பட்ட ஊடகத்தின் உரிமையையும் பறிக்கும் வகையில் இருக்காது என்றும் முடிவு செய்யப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் வெளுத்து வாங்கும் மழை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று புதன்கிழமை...

அதிரை அருகே குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை, சடலமாக மீட்பு..!!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் ஆன் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் விரைந்து சென்ற காவல்...

அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்..!!

அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம் . அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் ECR. சாலையில் நடந்த விபத்தொன்றில்...
spot_imgspot_imgspot_imgspot_img