சமீபத்தில் சட்டமியற்றிய NRC,CAA,NPR ஆகியவகைளை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
தமிழகத்தில் இந்த சட்டத்தின் பாதகங்களை அறிந்து ஆட்சியாளர்கள் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது வேதனையான விடயம்.
இந்நிலையில் அமைச்சர் உதயகுமார் தமிழகத்தில் NRC சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
இது ஏமாற்று வேலை என்றும், மத்திய அரசே இந்த என் அர் சியை தற்போது அமல் படுத்தும் திட்டம் இல்லை என கூரிய நிலையில் NPR குறித்து தமிழக அரசு வாய் திறக்கவில்லை என்பது அறிந்ததே.
இந்நிலையில் இந்தியாவெங்கும் போராட்ட களங்கள் நாளுக்கு நாள் சூடு பிடித்துள்ள இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்க பலரும் தங்களது வங்கி சேமிப்பில் இருக்கும் ரொக்கங்களை திரும்ப பெற்று வருகின்றனர்.
இதனால் கிராமப்புற வங்கிகள் மட்டுமின்றி நகர் புற வங்கிகளும் திக்குமுக்காடி வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பொருளாதார துறை அமைச்சகம், வங்கி பரிவர்த்தனை விவரங்களை துள்ளியமாக கண்காணித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தணிக்கையாளர் (Auditor)ஒருவரிடம் கேட்ட போது நீங்கள் கூரியது போல் நடக்கும் பட்சத்தில் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க சில கட்டப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.