77 
அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத கால்வாயால் வீதிகளுக்குள் கழிவு நீர் புகுந்து நோயை பரப்பி வருகிறது.
சிறு மழைக்கு கூட தாங்காத கால்வாயால் தெருவுக்குள் கழிவு நீர் புகுந்து வருகிறது.
இதனால் அப்பகுதி தீவு போல காட்சியளிக்கிறது.
இந்த கழிவுநீரால் குழந்தைகள், முதியவர்களுக்கு சேற்றுபுண்,காய்ச்சல் போன்ற நோய் தொற்றுக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
