116
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளம், புதுவையில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு செய்து வருகிறது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.