Home » மதுக்கூர் : கூடுதல் கண்கானிப்பாளரை சந்தித்த அதிரையர்கள் !

மதுக்கூர் : கூடுதல் கண்கானிப்பாளரை சந்தித்த அதிரையர்கள் !

by
0 comment

அதிராம்பட்டினம் முன்னாள் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் பட்டுக்கோட்டை சரக துணை கண்கானிப்பாளராக பணியாற்றிய நிலையில் கூடுதல் SPயாக பதவி உயர்வடைந்து ஓய்வு பெற்றார்.

அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளராக இருந்த காலத்தில் சட்டம் ஒழுஙகு சீர்கெடாமல் 0℅ கிரைம் என்ற நிலைக்கு கொண்டு வந்து எல்லோரிடமும் நன்மதிப்பைப் பெற்றார்.

அவரை மரியாதை நிமித்தமாக இன்று காலை அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் அப்துல் கஃபூர், என்கிற மரைக்கான்,தய்யூப், நிஜாம்,பாரூக,காதர் முகைதீன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அவர்களை முன்னாள் DSP செங்கமலக் கண்ணன் அவரது மருமகன் ஜாவீத் வரவேற்றனர்.

பரஸ்பரம் நலம் விசாரிப்போடு அதிரையர்கள் தமது பணிக்காலத்தில் ஆற்றில் நல்ல பல பணிகளை நினைவு கூர்ந்தார்.

அவருக்கு பொதுமறையாம் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார் பெற்று கொண்ட முன்னாள் DSP செங்கமலக் கண்ணன், ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க இந்த திருக்குர்ஆன் மிகவும் உகந்தது என கூறியுள்ளார்.

மேலும் அதிரை மக்களுக்கு தமது நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter