அதிவேக ரயில்கள் கடப்பதால் விபத்தினை தடுக்க நடவடிக்கை !
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயில் நிலையல் அருகே உள்ள பாதையை ரயில்வே அதிகாரிகள் அதிரடியாக அடைத்தனர் இதனை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் அதிகாரிகள்,ஐக்கிய ஜமாத்தினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்,அப்போது உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு அந்த பகுதிக்கு செல்ல ஏதுவாக 2அடி மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு அடைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்காத அதிகாரிகள் 1.5அடி மடுமே இடைவெளி விட்டு மீதமிருந்த பகுதியை அடைத்து சென்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது ரயில் ஓட்டுநர் பரிந்துரை பேரில் இந்த பாதையை அடைக்க உத்தரவிடப்பட்டது என்றும் இது போன்ற பாதைகளில்தான் அதிகளவில் விபத்துகள் நடப்பதாகவும்,குறிப்பாக கால்நடைகள் அதிகளவில் ரயிலில் அடிப்பட்டு இறப்பதாக தெரிவித்தனர்.




