Home » மணிப்பூர் கலவரத்திற்கு காரணமே வேற, போஸ்னியா பாணியில் இன அழிப்புக்கு உத்தேசம்?

மணிப்பூர் கலவரத்திற்கு காரணமே வேற, போஸ்னியா பாணியில் இன அழிப்புக்கு உத்தேசம்?

by Admin
0 comment

மணிப்பூரில் நடப்பது இன அழிப்பா? குஜராத் மாடலில் குறி வைக்கப்படும் குகி – பகீர் பின்னணி!!

மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருவது இன அழிப்பு. மணிப்பூரில் 2 பிரிவு மக்கள் வாழ்கிறார்கள். ஒரு பிரிவு சமவெளியிலும், பழங்குடியினர்கள் மலைப்பகுதியிலும் வசிக்கிறார்கள்.

சமவெளியில் இருக்கும் பெரும்பான்மையினர்களே முதலமைச்சர் பதவி உட்பட அனைத்து அதிகார மையங்களிலும் உள்ளார்கள். இவர்கள், மலைவாழ் மக்களை ஒடுக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.

அரசு நடுநிலையாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சொல்கிறது. இதை கலவரம் என்று கூட சொல்ல முடியாது. அங்கு நடப்பது இன அழிப்பு. போஸ்னியா போன்ற நாடுகளில் இது நடந்தது. அப்படியானது இங்கு நடக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.

வாக்கு அரசியல் சார்ந்து இருக்கக்கூடிய வெறுப்பை விதைத்து, அங்குள்ள அரசு இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பது நியாயமான குற்றச்சாட்டு.

இதற்கு வாக்கு அரசியல் மட்டுமே காரணம் அல்ல. இதற்கு பின்னால் இருக்கக்கூடிய இயற்கை வளங்களை கொள்ளையடித்து, பழங்குடிகளிடம் இயற்கை வளம் சார்ந்து இருக்கக்கூடிய அதிகாரங்களை பறிப்பதும் நோக்கமாக உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு 370 சட்டப்பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட போல், 371 சி சட்டப்பிரிவு மணிப்பூருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது.

1971 ல் கொண்டு வரப்பட்ட அந்த அந்தஸ்தின்படி மணிப்பூரை நிர்வாகிக்க சுயாதீன அமைப்பு இருக்க வேண்டும். மலைவாழ் மக்களுடைய பாதுகாப்புக்காக அது இருக்க வேண்டும் என்று அந்த அந்தஸ்து சொல்கிறது. அந்த மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்கு இருக்கும் நிலம் சார்ந்த, விவசாயம் சார்ந்த உரிமைகள், நடைமுறைகளை மேலாண்மை செய்ய அந்த அமைப்பு இருக்கிறது.

அரசு அப்பகுதியில் எந்த திட்டத்தை நிறைவேற்றினாலும் அந்த அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். இதுபோல் மாவட்ட அளவில் 6 கமிட்டிகள் உள்ளன. 6 பிராந்தியங்களில் உள்ள மலை சார்ந்த பகுதிகளை, இயற்கை வளங்களை பாதுகாக்கும் அதிகாரம் பெற்றவையாக இந்த அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பில் அந்த பழங்குடிகளே இருக்க முடியும்.

இந்த நிலையில் தான் மார்ச் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் சமவெளியில் வாழும் மெய்தி குழுவினர் பழங்குடி அந்தஸ்து கேட்கிறார்கள். அரசு தரப்பும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்கிறது. காரணம் அந்த அந்தஸ்தை பெற்றால் பழங்குடிகளுக்கான அமைப்பில் அதிகாரம் பெற்று இயற்கை வளங்களை எடுக்க முடியும்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மற்ற தரப்பில் பதில் கேட்காமல் அன்றே தீர்ப்பு அளித்தார். மத்திய அரசின் பரிந்துரையின்படி மெய்திக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளிகிறது. மத்திய அரசும் மெய்திக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் முடிவில் இறங்கியது. இதனை எதிர்த்து குகி இன மக்கள் போராடுகிறார்கள்.

மறுபக்கம் குகி இன பழங்குடிகளுக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. உடனே அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துகிறார்கள். அரசின் ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயுதங்களை எடுத்து தாக்குகிறார்கள். பலி எண்ணிக்கை, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், அரசு சொன்னதை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

குஜராத்தில் என்ன செய்தார்களோ, அதே போன்ற சம்பவம் மணிப்பூரில் நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளின் பட்டியலை வைத்திருந்ததை போல், குகி இனத்தினரின் பட்டியலை அவர்கள் வைத்திருந்தனர். அரசு இதற்கு உதவியது. இந்த வெறுப்பு அரசியல் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது அதிகாரத்துக்கு வருவது மட்டுமல்ல, அங்குள்ள மண், இயற்கை வளங்களை வியாபாரம் செய்வது, சுரண்டுவதும் பின்புலமாக உள்ளது.

இந்த நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் மீதான உரிமையும் எங்களுக்கே சொந்தம் என்று சொல்கிறார்கள். பழங்குடிகளின் உரிமைகளையும் நாங்களே முடிவு செய்வோம் என்ற பார்வையும், பாசிச தன்மையின் முக்கியமான அங்கம். கலாச்சார ரீதியாக, அரசியல் ரீதியாக மட்டும் இவர்கள் இவ்வாறு செயல்படுவது, இயற்கை வளங்கள் சார்ந்த உரிமை, வியாபாரம், நோக்கமும் பின்னணியில் உள்ளது. அந்த சார்ந்த பார்வையும் இந்த விசயத்தில் நமக்கு இருக்க வேண்டும்.

அரசியலமைப்பு தந்த உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுவதை பார்க்கிறோம். ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 பறிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது 371 சி யில் கை வைத்து உள்ளார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter