இரிடியம் மோசடி – கோடிக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர்கள் என்ற செய்தியை அடிக்கடி படிப்போம்.
இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னண்டால் இந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது. மிக அதிக அளவிலான உஷ்ணத்தை தாங்கக்கூடிய உலோகமாகும் இது.
கோவிலில் ஆயிரக்கணக்கான முறை உச்சரிக்கிற மந்திரங்கள் மிகப்பெரிய சக்தியாக மாறி கோவில் கலசத்தை அடையும். இப்படிப்பட்ட சக்தி கொண்ட கலசத்தை லட்சக்கணக்கான வோல்டேஜ் சக்திக்கொண்ட இடி மின்னல் தாக்கும் போது அதன் சக்தி உச்சம் பெறும். அப்போது அது இரிடியமாக மாறுகிறது.என சிலரால் நம்பப்படுகிறது.
இதனை வைத்து சில மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறது இதனை அனைத்து ஊடகங்களும் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதில் அதிரையர்களும் விதிவிலக்கு அல்ல இரிடியம் தொழிலுக்கு என பலரிடம் பணம் பெற்று முதலீடு செய்த நபருக்கு தற்போது பணம் கிடைத்து விட்டதாகவும் கூறி அவரிடம் மீண்டும் ஒரு தொகையை கழற்றியுள்ளது அம்மோசடி கும்பல்.
மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில் தாம் எதிர்பார்த்து கொண்டிருந்த அந்த தொகை விரைவில் கிடைக்க உள்ளது என்றேன்னி பலரிடமும் கடனை வாங்கி மீண்டும் அந்த கும்பலுக்கு பணத்தை செலுத்தியுள்ளார்.
இதனை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெற்று கொண்ட அந்த மோசடி கும்பல் நேரிடையாக பணத்தை டெலிவரி செய்ய வருவதாக கிட்டதட்ட ஒரு மாத காலமாக இழுத்தடித்து வருகிறது.
அவ்வப்போது 2000-3000 ரூபாய்களை டீசல்,சாப்பாடு என அந்த ஆசாமியிடம் கழற்றி வருகின்றனர்.
ஈவு இறக்கமற்ற முறையில் முடிந்தவரை பணம் பிடுங்கும் முதலைகளிடமிருந்து தற்காத்து கொள்ளுங்கள் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.